அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி பணம் கொள்ளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டுப் பகுதியில் உள்ள தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளை கும்பல் ஒன்று அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து பெருமளவான பணம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நேற்று(ஓகஸ்ட் 24) அதிகாலை 4.30 மணியளவில் தேவாலயத்தினுள் அத்துமீறி நுழைந்த நால்வர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்றே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

இதன்போது அருட்தந்தையரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த 30 ஆயிரம் ரூபா பணத்தையும், தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article