அரச பாடசாலைகளை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார்.
அனைத்து பாடசாலைகளையும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னரே ஆரம்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிக்காது கட்டம் கட்டமாகவும் ஆரம்பிக்க ஆராயப்பட்டது.