அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறித்த உறுதி!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னரான இரண்டு வரவு செலவுத் திட்டங்களின் ஊடாகவும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(07.11) இடம்பெற்ற தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு சூழலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கான அரசாங்கமாக நிறுவப்பட்டுள்ளது.

இன்று அரச ஊழியர்களுக்கான சம்பளப் பிரச்சினைகள், ஓய்வூதியதாரர்களின் கவலைகள் மற்றும் பிற சவால்கள் என உழைக்கும் மக்களின் அனைத்து உரிமைகளும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் சிறிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் கூட பல தசாப்தங்களாகக் கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.

ஆனால் இன்று அத்தகைய நீண்டகாலப் போராட்டங்களின் அவசியமின்றி இவை அனைத்தும் சாத்தியமாகின்றன என குறிப்பிட்டுள்ளார். 

Share this Article
Leave a comment