தங்களது விசாரணையின் முடிவில் வழங்கப்படும் பரிந்துரைகளை செயல்படுத்ததவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும்,
இந்த விடயம் தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதமசெயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களின்தலைவர்கள் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 15(7) படி, பரிந்துரைகளைசெயல்படுத்திய விவரங்களை, நியமிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அரசநிறுவனங்கள், ஆணைக்குழுவுக்கு அறிவிப்பது கட்டாயமாகும்.
அதேநேரம், பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 17/2005இல், இந்த சட்டப்பூர்வகடமையை அரச நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சில நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், பரிந்துரைகளை செயல்படுத்த மறுத்து‘மேல்முறையீடு உள்ளது‘ எனக் கூறுவதை இலங்கை மனித உரிமைகள்ஆணைக்குழு கண்டித்துள்ளது.
சட்டத்தின் பிரகாரம், தங்களது பரிந்துரைகள் மீது மேல்முறையீட்டுக்கான வாய்ப்புஏதும் இல்லை எனவும், அதனைச் சுட்டிகாட்டி பரிந்துரைகளைசெயல்படுத்துவதை தவிர்ப்பது சட்டவிரோதமானது எனவும் அந்த ஆணைக்குழுதெரிவித்துள்ளது.
எனவே, அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் சட்டப்பூர்வ கடமைகளைஉணர்ந்து, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மதித்து, மக்களின் அடிப்படைஉரிமைகளை பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவலியுறுத்தியுள்ளது.
இதனை தவிர்க்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.