அப்பியாசக் கொப்பிகளுக்கும் நூல்களுக்கும் Vat வரி நீக்கம் !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அப்பியாசக் கொப்பிகள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்கள் பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.

 2024 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அச்சிடப்பட்ட நூல்களும் ஏனைய அச்சிடப்பட்ட பொருட்களும் பெறுமதிசேர்க்கப்பட்ட வரிக்கு உட்படுத்தப்பட்ட அதேவேளை அப்பியாசக் கொப்பிகள் அத்திதிகளுக்கு முன்னர் இருந்தே பெறுமதிசேர்க்கப்பட்ட வரிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.  

 கல்வியின் முக்கியத்துவத்தையும் அத்தியாவசிய கல்விசார் பொருட்கள் சாதரண விலைகளில் கிடைப்பதற்குமான தேவையினையும் அங்கீகரிக்கும் இந்நிவாரணம் சமூகத்தின் பரந்த வகுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற அதேவேளை கல்வி, அறிவு மற்றும் வாசிப்பு என்பவற்றுக்கான அனுசரணையை ஊக்குவிக்கும் நோக்கடன் பாடப்புத்தகங்கள், சொல்லகராதிகள், கலைக்களஞ்சியங்கள், பிள்ளைகளுக்கான பட மற்றும் சித்திரம் வரைதல் புத்தகங்கள், கல்விசார் வெளியீடுகள் மற்றும் வேறு அச்சிடப்பட்ட நூல்கள், அப்பியாசக் கொப்பிகள் என்பவற்றை பெறுமதிசேர்க்கப்பட்ட வரியிலிருந்து விலக்குவதற்கு நாம் முன்மொழிகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

Share this Article
Leave a comment