அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்த லங்கா சதொச நிறுவனம்!
ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
நாளை(ஒக்ரோபர் 19)முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் நிறை கொண்ட ரின் மீனின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய 650 ரூபாவாகும்.
மேலும், 425 கிராம் நிறைகொண்ட உள்ளூர் ரின் மீனின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 545 ரூபாவாகும்.
ஒரு கிலோ பச்சை பயறு 20 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.
அத்துடன், கிலோ நெத்தலியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1090 ரூபாவாகும்.
மேலும், கொத்தமல்லி ஒரு கிலோகிராமின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.