அதிபரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பு ஆர்ப்பாட்டம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வரணி கரம்பைக்குறிச்சி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோரால் இன்று (ஜனவரி 3) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை நுழைவாயிலை மறித்து பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை, பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத நிலையில் ஆசிரியர்கள் மட்டுமே நேற்றுப் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், அதிபர் மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவில்லை எனத் தெரிவித்தனர்.

Share this Article