அடுத்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படும்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

2024 இற்கான புத்தங்கள் தற்போதும் அச்சிடப்பட்டுள்ளன. சீருடைகள் அடுத்த மாதம் 31  ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பு – பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற, டீ.எஸ் சேனநாயக்க கல்லூரியின் ஸ்தாபகரும் தலைசிறந்த கல் வியலாளருமான மறைந்த ஆர்.ஐ.ரி. அலஸின் 10 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இது தெடர்பில் கருத்து வெளியிட்ட அவர், அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் வேலைத் திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

யுனெஸ்கோவுடன் இணைந்து 8 பாடசாலைச் சேர்ந்த 8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணி கூப்பன்களைப் பகிர்ந்தளிக்கவுள்ளோம் என குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கத்தின் நிதியை மாத்திரம் பயன்படுத்தாமல் பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கு பாதணி களைப் பெற்றுக்கொடுப்போம்.

யார் கல்வி அமைச்சராக இருந்தாலும் 4 வருடங்களுக்குள் அந்த உதவிகள் நாட் டுக்கு கிடைக்கும் – என்றார்.

நன்றி ஈழநாடு

Share this Article