தீவகக் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலொன்று வேலணை சரஸ்வதி வித்தியாலயம். வேலணைக்கு செல்லும் வழியில் முதலாவதாக இப்பாடசாலை அமைந்துள்ளது. இப்பாடசாலைச் சூழ பொதுநூலகம், வேலணை பிரதோசபை, பலநோக்குக்கூட்டுறவு சங்கம், கல்வித்திணைக்களம் என்பன காணப்படுகின்ற. பிரதான போக்குவரத்து பாதையிலும் மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும் இவ்விடம் திகழ்கின்றது
இந்தப் பாடசாலையிலிருந்து கடந்த வருடம் நடைபெற்று முடிந்த தேசிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 மாணவர்கள் தோற்றி இதில் ஒரு மாணவி வெட்டுப் புள்ளிக்கு மேல் பெறு பேறு பெற்றுச் சித்தியடைத்துள்ளார். நாதன் வாணிகா என்ற மாணவியே 146 புள்ளிகளைப் பெற்று தகுதி பெற்றுள்ளார். இப்பெறுபேறு குறித்து பாடசாலை அதிபர் சோ.தவநடராஜா குறிப்பிடுகையில் எமது பாடசாலையில் 9 வருடங்களின் பின்னர் ஒரு மானாவி சித்தி பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
எமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் மிகவும் பின்னடைவான பொருளாதார நிலையில் உள்ளவர்கள், ஆசிரியர்களின் அயராத முயற்சியும் பெறறோர்களின் ஊக்கமுமே இந்த பெறுபேற்றுக்கு காரணம்.
மூன்று மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் ஒரு மாணவி வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றிருத்தார். இன்னொரு மாணவர் டி 0 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தார். எங்கள் பாடசாலையில் தற்பொழுது 5 மாணவர்கள் கல்வி கற்கிளறார்கள். 18 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றார்கள். தாம் 1 முதல் தரம் -11 வரை வகுப்புக்கள் உள்ளன. போதியளவு ஆளணியுள்ள போதிலும் மாணவர்களின் வருகை குறைவாகவுள்ளமை கவலையளிக்கின்றது. இந்தப் பெறுபேற்றின் பின்னர் எமது பாடசாலையின் மீது நம்பிக்கை வைத்து எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளை எமது பாடசாலைக்கு அனுப்புவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
இந்த வெற்றிக்க உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதுடன் ஆசிரியர் திருமதி டனிஸ்ரா கண்ணன் அவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.