ஈழத்து கலைஞர்களின் முழுமையன பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட முழு நீளதிரைப்படமான தீப்பந்தம் திரைப்படம் நாளையதினம் (மே30) அதிதிகள்பார்வைக்காக திரையிடப்படுவதுடன் நாளைமறுதினம் (மே31) மாலை 6.00 மணிக்கு ராஜா திரை அரங்கில் திரையிடப்படவுள்ளதாக குறித்ததிரைப்படத்தின் நிர்வாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து யாழ் ஊடக அமையத்தில் இன்று (மே29) நடைபெற்ற ஊடகசந்திப்பில் இவ்வறு தெரிவித்த படக்குழுவினர் மேலும் கூறுகையில் –
“மூட்டி வைத்த தீயே
எங்கு போனாய் நீயே
தீட்டி வைத்த கனவே
தோற்கலாமோ நாமே” என்ற கருவை உயிரோட்டமாக தாங்கிய முழு நீளக்கதையுடன் நகரும் குறித்த திரைப்படமானது எமது ஈழத்து கலைஞர்களதுமுழுமையாக தரிக்கப்பட்ட திரைப்படமாகும்.
அத்துடன் எமது தயரிப்பில் உருவாகும் மூன்றாவது திரைப்படமாகவும் இதுஅமைகின்றது.
எமது ஈழத்து கலைஞர்களின் முயற்சிக்கு கடந்த இரண்டு திரைப்படங்களுக்கும்அதிகளவான வரவேற்பு கிடைத்து எமது முயற்சிக்கு பெரு வெற்றியைஈட்டித்தந்தது.
அதேபோன்று நாளைமறுதினம் வைகாசி 31 முதல் இலங்கையில் ராஜாதிரையரங்கில் மாலை 6.00 மணிக்கு தீப்பந்தம் திரையேற்றப்படவுள்ளது.
அத்துடன் புலம்பெயர்ந்த நடுகளிலும் 31.05.2025 அன்றுதிரையிடப்படவுள்ளதாகவும் குறித்த படக்குழு தெரிவித்துள்ளதுடன் படத்தைபார்வையிட்டு தமது முயற்சியை வெற்றிபெற செய்யுமாறும் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.