நாட்டில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தால் பல குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிவாரண உதவியாக நுளம்புத்திரி மற்றும் பிஸ்கெட் பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்கள் இன்று (22/12) காலை அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்கள் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.