வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2023 ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின் பின்னர் அவர் வெளிநாடு சென்றிருந்ததுடன், நேற்று (23/02) மீண்டும் நாட்டிற்குத் திரும்பிய போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

Share this Article