வென்னப்புவவில் நடத்தப்பட்டதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (ஓகஸ்ட் 31) நடத்தப்பட்டதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, காரில் வந்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

காரில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை காரில் மோதிவிபத்துக்குள்ளாக்கி  அதன்பின்னர், மோட்டார் பயணித்தவர்ளை கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாககுறிப்பிடப்படுவதுடன் மற்றைய நபர் மீது இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிபிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ஸ்த்தலத்திலேயே பலியானார். உயிரிழந்தவர்மேல்நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றிற்காக வழங்கப்பட்டஉத்தரவின் பேரில், வென்னப்புவ பொலிஸில் முன்னிலையாகி கையொப்பமிடசென்றவர் என்று தெரியவந்துள்ளது.

கையொப்பமிட்டதன் பின்னர், அவரும் மற்றுமொருவரும் மோட்டார் சைக்கிளில்வீடு திரும்பிய போதே, குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர்மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்ததாகவும் பொலிஸார்குறிப்பிடுகின்றனர்

Share this Article