வீரவில பகுதியில் 2 பஸ்கள் மோதி 4 பேர் பலி, 40 பேர் காயம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கையின் தெற்கிலுள்ள வீரவில பகுதியில் இன்று (18/03) இடம்பெற்ற இரு அரச பேரூந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சுமார் 40 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த மற்றொரு பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில் பகுதியில் இடம்பெற்றதாகவும், காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share this Article