விபத்த்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் செம்மணி மயானத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில்படுகாயமடைந்த நபர் வியாழக்கிழமை (ஜூலை31) உயிரிழந்துள்ளார்.

மீசாலை கிழக்கு மீசாலை பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணசாமிலிங்கேஸ்வரன் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த ஜூலை28ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு வந்துகொண்டிருந்தார்.

இதன்போது செம்மணி மயானத்திற்கு அருகாமையில் வீதியால் சென்றதுவிச்சக்கர வண்டியை முந்துவதற்கு முயற்சித்தவேளை துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டனர்.

துவிச்சக்கர வண்டியில் சென்றவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். இருப்பினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (ஜூலை31) இரவுஉயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிநமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.

Share this Article