குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களை கையகப்படுத்தும்போது, வாகன உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தால், அதைமீறி வாகனங்களைக் கையகப்படுத்த முடியாது என்று பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
அந்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குத்தகை அல்லது நிதி நிறுவனங்கள் வாகனங்கள் அல்லது உபகரணங்களைப் பெறுவது தொடர்பாகச் சில பொலிஸ் நிலையங்களில் உரிமையாளரால் செய்யப்படும் முறைப்பாடுகள் நிராகரிக்கப்படுகின்றன என்றும், இனிவரும் காலங்களில் அத்தகைய முறைப்பாடுகளை ஏற்று உரிய விசாரணை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வாகன திருட்டு மற்றும் திருட்டு போன்ற குற்றங்கள் நடந்தால், பொலிஸார் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.