வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சுமார்15,000 வாகனங்கள் இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்காக காத்திருப்பதாகமோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்கதெரிவித்துள்ளார்.

அச்சிடும் நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகஏப்ரல் 30 ஆம் திகதி முதல் இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும், இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்கு புதிய நிறுவனத்தைத்தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 15 நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளர் மேலும் தெரிவித்தார்

Share this Article