வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்றவளிமண்டலவியல் இடையூறின் காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்றமழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவுவேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சிலஇடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழைபெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில்பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையானகரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல்அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் மேற்குத்திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

காலி தொடக்கம் மாத்தறை ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாகமட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் இவ்வாறானசந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக்காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்றுவீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும்கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Share this Article