வடமராட்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் தீ விபத்தினால் உயிரிழப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியில் பணியாற்றிய தமிழ் ஆசிரியை ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையாக காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (டிசம்பர் 10) பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிகாயமடைந்த இவர் முதலில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நிலைமை மோசமடைந்ததால் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். எனினும், மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் இன்று (டிசம்பர் 11) அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த 43 வயதுடைய நிஷாந்தினி நித்திலவர்ணன் ஆவார். இவர் இரு பிள்ளைகளின் தாயார் என்பதுடன், இவரது கணவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆனந்தமயில் நித்திலவர்ணன் ஆவார்.

சடலம் கூற்றுச் சோதனைக்காக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பருத்தித்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share this Article