வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகயீன விடுப்பு போராட்டம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்.கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று (17/08) முன்னெடுக்கப்பட்டது

வடக்கு மாகாண பிரதம செயலர் தலைமையில் கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற துறைசார் மீளாய்வு கூட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசிமைக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இதேவேளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  இழிவுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக  உரிய விசாரணைக்குழுவை அமைத்து ஒரு வாரத்தினுள் தீர்வு பெற்றுத்தருவார் என வடக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்தார்.

வடக்கு மாகாண சபைக்கு முன்பாக கண்டனப் போராட்டம் நடத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆளுநர் அலுவலகம் சென்று ஆளுநரிடம் மகஜர் கையளித்தனர். இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தெளிவாக கேட்டறிந்த ஆளுநர் எழுத்து மூலமாக அனைத்தையும் தருமாறு கேட்டுக்கொண்டார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கண்ணியமான சேவைக்கு தாம் எப்போதும் மதிப்பளிக்கிறார் என தெரிவித்த ஆளுநர் ஊடகங்கள் வாயிலாக தாம் பிரச்சினைகளை அறிந்துகொண்டிருக்கிறார் எனவும் தெரிவிதார்.

 

பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டியதன் அவசியத்தையும் அவர்  ஏற்றுக்கொண்டார்.

Share this Article
Leave a comment