இவர்களில் யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ சேவையாளர் உட்பட 19பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திரு.ஆர்.கேதிஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் பல்கழைக்கழக மருத்துவ பீடம் என்பவற்றில் 634 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 29 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்;பாணம் போதனா வைத்தியசாலையின் இரண்டு மருத்துவர்கள் தாதியர்கள் மூவர் உட்பட 19 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தபபட்டுள்ளது. மேலும் சுகாதர ஊழியர்கள் 04பேர் மருத்துவ பீட மாணவர்கள் 02பேர் தாதிய மாணவர் மற்றும் சுத்திகரிப்பு பணியாளர் ஒருவர்
இத்துடன் தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த 06பேர் சிறைச்சாலைக் கைதிகள் இருவர் காரைநகரில் போக்குவரத்து சாலையுடன் தொடர்புடைய தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவர் திருநல்வேலி சந்தைப் பகுதியுடன் தொடர்புடைய இருவர், தெல்லிப்பளை வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியினை சேர்ந்த ஒருவர் என யாழில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலையில் சோக்கப்பட்ட மாந்தை மேற்கைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவர் வவுனியா ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய இருவர் என 29பேர் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.