வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்துக்கு 42 ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 36 பேர் சுதேச வைத்தியசாலைகளுக்கும், 6 பேர் உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகங்களின் கீழும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (நவம்பர் 07) யாழ் – பண்ணையில் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி ப. ஜெயராணி, மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்திய கலாநிதி தில்லையம்பலம் சர்வானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.