லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம் – வைத்தியசாலையில் அனுமதி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான்ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத்தகடு இல்லாத மகிழுந்து ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள்இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டார்.

கண்டி – கட்டுகஸ்தொட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, நுகேகொடை – கங்கொடவில மேலதிகநீதவான் சஞ்சய லக்மால் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறுஇதன்போது நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் திடீர் சுகவீனம்காரணமாக அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச்சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின்மனைவியைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கைஎடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்தெரிவிக்கின்றனர்.

Share this Article