யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன விஜயம் செய்யவுள்ளார்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பை ஏற்று பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் அடுத்த வாரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக்குழு குழுவின் தலைவர் என்றவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த அழைப்பை ஏற்று வருகை தரும் பிரதமரின் விஜயம் தொடர்பாக நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தல் செய்யும் கலந்துரையாடல் ஒன்றை சூம் செயலி ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (ஜூன் 07) காலை நடத்தினார்.

இக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதமரின் மகனுமான யதாமினி அவர்களும், வடமாகாண பிரதம செயலாளர் திரு. இளங்கோவன் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும் கலந்து கொண்டனர்.

Share this Article