யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாகமோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாகமோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் ,மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்தியவர்கள் என 10 பேர் அதிரடியாக நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இளைஞர் குழுக்கள் பெரிய சத்தங்களுடன் வீதியில் ஆபத்தை விளைவிக்கும்விதமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்துதல் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் சாகசங்கள் செய்து மக்களுக்கு இடையூறு விளைவித்துவந்துள்ளதாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கவனத்திற்குகொண்டு செல்லப்பட்டதை அடுத்து, போக்குவரத்து பொலிஸார் நேற்று பண்ணைபகுதியில் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன்போது கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் , அவர்களின் மோட்டார்சைக்கிள்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் , நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்தாககூறப்படுகிறது.

Share this Article