யாழ். வர்த்தகர்களை சந்தித்தார் – சுற்றுலாத்துறை அமைச்சர்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறைஅமைச்சர் விஜித ஹேரத், யாழ்ப்பாண வர்த்தகர்களை நேற்று(ஏப்ரல்12) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், தேர்தல்பரப்புரை கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்

இந்தநிலையில், நேற்று மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர்விடுதி ஒன்றில் யாழ்ப்பாண வர்த்தகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், அமைச்சர் விஜித ஹேரத் வடமாகாண சுற்றுலாத்துறை சார்ந்ததொழில்முனைவோர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

   

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது குறித்த வட மாகாண தொழில்முனைவோரின் கருத்துக்கள் தொடர்பாக இதன்போது அமைச்சர் விஜித ஹேரத்கேட்டறிந்துகொண்டார்.

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ஆகாய மார்க்க பயண சேவையினைஆரம்பித்தல், யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறைதுறைமுகம் ஊடாக இலங்கைக்கு வரும் பயணிகள் விபரத்தை குறித்ததிணைக்களமூடாக வெளிப்படுத்துதல், வில்பத்து சரணாலயத்துக்கானநுழைவாயிலை மன்னாரிலும் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்அமைச்சரிடம் கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்தகோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவது குறித்த சாதக பாதகங்கள்இதன்போது அமைச்சரால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதேவேளை, குறித்த கலந்துரையாடல் நிறைவில், நேற்றைய தினம்மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரியவின் யாழ்ப்பாணத்துக்குக்கான விஜயம்தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டநிலையில், அதுகுறித்து எதுவும் தனக்கு தெரியாது என அமைச்சர்பதிலளித்திருந்தார். 

குறித்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசியமக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், வைத்தியர்சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகரசபை முதன்மை வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மற்றும் வர்த்தகர்கள்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article