யாழ் மாவட்டத்தில் முதல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வடக்கு வலய பிரதிப் பதிவாளர்நாயகம் ப.பிரபாகர்  தலைமையில் இன்றைய தினம் (ஜூலை01)  மாவட்டச்செயல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகஅரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டார்.

தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் இந் நிகழ்வானதுதேசிய முக்கியத்துவம்வாய்ந்த நிகழ்வு 2021.01.01 இலிருந்து  பிறந்த பிள்ளைகளுக்கு – சர்வதேசதரத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டின் 08 ஆவது மாவட்டமாகவும், வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது மாவட்டமாகவும் யாழ்ப்பாணமாவட்டத்தில் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.


மேலும், QR கோட்டினைஉள்ளடக்கியதன் மூலம் இலகுவில் பிறப்புச் சான்றிதழை எடுக்ககூடிய வகையில்அமைந்துள்ளதுடன், ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து “எனதுஇலக்கம்” என்பது தேசிய அடையாள அட்டை இலக்கமாக வருவதன் மூலம்பிள்ளைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் போதே தேசிய அடையாள அட்டைஇலக்கத்தினை தெரிந்து கொள்வதும் இதன் சிறப்பாகும். மேலும், இச் சான்றிதழ்தமிழுடன் ஆங்கில மொழியும் சேர்த்து வழங்கப்படுவது சிறப்புக்குரியது எனவும்இதன் மூலம் மொழிபெயர்ப்பின் தேவைப்பாடு அவசியமற்றதாகின்றது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதேசசெயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதி பதிவாளர் நாயகம், காணிப்பதிவாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பதிவாளர்கள், கிராமிய பிரதேசபதிவாளர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டார்கள்.

Share this Article