யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்றைய தினம்(ஜூன்14) காலை யாழ் மாவட்ட செயலகத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமானஇராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராகசுந்தரமூர்த்தி கபிலன் அவர்களுக்கான நியமனக் கடிதம் அமைச்சரால் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், யாழ் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், பிரதம கணக்காளர்எஸ் கிருபாகரன், அமைச்சரின் அலுவலகத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.