யாழ் மாவட்ட. 08 பிரதேச செயலகங்களிற்கு புதிய செயலாளர்கள் விரைவில்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 பிரதேச செயலகங்களிற்கு புதிய பிரதேசசெயலாளர்கள் நியமிக்கப்படுவதற்கான சிபார்சினை உள்நாட்டு அலுவல்கள்அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 8 பிரதேசசெயலார்கள் புதிதாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

இதற்கமைய

01. கோப்பாய் பிரதேச செயலாளராக  செயலாளர் ச.மஞ்சுளாதேவி

02. உடுவில் பிரதேச செயலாளராக பிறேமினி பொன்னம்பலம்

04. பருத்தித்துறை பிரதேச செயலாளராக  ந.திருலிங்கநாதன்

04. சாவகச்சேரி பிரதேச செயலாளராக பி.சத்தியசோதி, 05. நெடுந்தீவு பிரதேசசெயலாளராக எஸ்.பிரபாகரன்

06. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராக  கு.பிரபாகரமூர்த்தியும்,

07. மருதங்கேணி பிரதேச செயலாளராக உசா சுபலிங்கம், 08. வேலணை பிரதேசசெயலாளராக ரி.அகிலன் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட

மேலதிக அரச அதிபர் காணி பதவியில் தற்போதைய உடுவில் பிரதேசசெயலாளர்  பா.ஜெயகரன் நியமிக்கப்படுவதோடு  சமுர்த்தி பணிப்பாளராகஸ்ரீவர்ணன் நியமிக்கப்படவுள்ளார்.

இந்த நியமனங்களிற்கான சிபார்சினை உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை  அமைச்சு, பணிப்பாளர் இலங்கை நிர்வாகசேவைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுஅதன்   பிரதிகள் மாவட்ட அரச அதிபர் மற்றும் மாகாண பிரதம செயலாளருக்கும்அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Share this Article