யாழ். மாநகரசபை அமர்வுக்குள் நாயை அழைத்தவருக்கு ஒருமாதம் அமர்வுத் தடை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
யாழ். மாநகரசபை அமர்வுக்குள் நாயை அழைத்தவருக்கு ஒருமாதம் அமர்வுத் தடை
யாழ்.மாநகரசபையில் சக உறுப்பினரை ‘நாய்’ என பேசிய உறுப்பினர் ஒரு மாதகாலம் சபை அமர்வுகளில் கலந்துகொள்ள தடை வித்திக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.
இதன்போது மாநகர சபையில் இருந்து திருடப்பட்ட ஆவணம் ஒன்று சபை உறுப்பினர் ரஜீவ்காந்தின் உத்தியோகபூர்வ முகநூலில் பதிவேற்றப்பட்டு இருந்தது.
குறித்த கடிதம் எவ்வாறு உறுப்பினர் கைக்கு கிடைத்தது என்பது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என முதல்வரினால் உறுப்பினருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்றைய அமர்வில் குறித்த விடயம் தொடர்பில் விவாதம் எழுந்தது.
இதன்போது சக உறுப்பினரான பார்த்தீபனுடன் வாக்கு வாதம் எழுந்திருந்தது. அதன் போது உறுப்பினர் ரஜீவ்காந்த், சக உறுப்பினரான வ.பார்தீபனை நோக்கி ‘நாய்’ என விளித்து பேசியிருந்தார்.
அதனால் முதல்வர் சபையில் அநாகரிகமான முறையில் சொற்பிரயோகங்களை பாவித்தமைக்காக சபையில் மன்னிப்பு கோரி, குறித்த சொற்பிரயோகங்களை மீள பெறுமாறு இரு உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.
அதனை அடுத்து உறுப்பினர் வ. பார்த்தீபன் மன்னிப்பு கோரி, தவறான, அநாகரிகமான சொற்பிரயோகங்களை பாவித்திருந்தால் அவற்றை மீள பெறுகிறேன் என சபையில் தெரிவித்தார்.
ஆனாலும் அவருடன் வாக்குவாதப்பட்டு ‘நாய்’ என விளித்த உறுப்பினர் ரஜீவ்காந்த் தான் சபையில் மன்னிப்பு கோர மாட்டேன் என அடம்பிடித்ததால் அவரை ஒரு மாத காலத்திற்கு அமர்வுத்தடை விதிக்கப்பட்டது.
Share this Article