யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு இம்மாதம் 4ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற 3 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டார். யாழ் மாநகரசபை பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களும் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பமும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, மன்னார் – உப்புக்குளம் பகுதியை சேர்ந்த 14 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து உப்புக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.