யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சைநிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கானசிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம்யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலை மற்றும்கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆகிய இரண்டில் மாத்திரம்காணப்படுகின்றது. இது இலங்கையின் மூன்றாவது நிலையமாக பதிவுபெறுகின்றது.

 

இந்த சிகிச்சை மிகவும் சிக்கலான ஒரு விடயங்களை கொண்டுள்ளதுடன் இரண்டு விஷேட படுக்கை அறைகளை கொண்டு அமைந்துள்ளது. மாதம் ஒன்றில் இருவருக்கு மாத்திரம் சிகிச்சை இதனூடாக செய்யமுடியும்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வைத்திய நிபுணர்களின்கடுமையான முயற்சியில் பல சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பிரிவினை கௌரவ சுகாதார அமைச்சர் Dr.ரமேஸ் பத்திரன அவர்கள் வைபவ ரீதியாக எதிர்வரும் வாரத்தில் திறந்து வைக்கவுள்ளார்.

Share this Article