யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மூத்த சத்திரசிகிச்சை நிபுணரும், குழாய் வழி சத்திரசிகிச்சைகளின் இமயம்எனப் போற்றப்பட்டவருமான வைத்தியர் V. சுதர்சனே அவர்கள் இன்று (15) காலமானார்.
தனிப்பட்ட காரணத்திற்காக கொழும்பு சென்றிருந்தபோது அவர் அங்கு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மரணத்திற்கான காரணம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் மட்டுமே உறுதியாகத் தெரியவரும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வைத்தியர் சுதர்சனின் மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு வருகின்றனர். இறுதி கிரியைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.