யாழ் பஸ்நிலையத்திற்குள் வைத்து சாரதி, நடத்துனர் மீது கத்தி வெட்டு!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் சாரதிக்கும், நடத்துனருக்கும்கத்திவெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று (டிசம்பர்24) இரவு இந்த சம்பவம் நடந்ததுள்ளது. மத்திய பேருந்துநிலையத்துக்கு அருகில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்குள் வைத்து யாழ்ப்பாணம், காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும், நடத்துனருமே தாக்குதலுக்குஇலக்காகியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த சாரதி நடத்துனர் யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹெல்மெட் அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வந்த 3 பேர் தாக்குதல்நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share this Article