வருமான வரி பரிசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்தி யாழ்ப்பாணத்தில்உள்ள நகைக்கடை ஒன்றில் பணத்தினை பறித்த குற்றச்சாட்டில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பிரதான சந்தேக நபரை 5 இலட்ச ரூபாய் பணத்துடன் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்வாகன சாரதி உள்ளிட்ட மூவர் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர்தலைமறைவாகியுள்ளதாகவும் , அவர்களையும் கைது செய்வதற்குநடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள்சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல்ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்ச ரூபாய் பணத்தினைபறித்துக்கொண்டு தப்பி சென்றது.
பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளைமுன்னெடுத்து வரும் நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.