யாழ்ப்பாணம், பலாலி வீதி சிராம்பியடிச் சந்தியில் இன்று காலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு (பெரியகுஞ்சுக்குளம்) பற்றிமா வீதியைச் சேர்ந்த அருளப்பு சிறிசோலோகு (வயது-50) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற மின் பஸ்ஸூடன் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.