யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியின் கற்கை நெறிகள் ஆரம்பம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் ஆறு மாதங்கள் நீளமுடைய குறுகிய கால முழுநேரக் கற்கைநெறிகள் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளன.

இதில் கணியளவை உதவியாளர், மோட்டார் சைக்கிள்/ஸ்கூட்டர் பழுது பார்வை, கணிணி வன்பொருள் சான்றிதழ், கணிணி வலையமைப்புச் சான்றிதழ், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் சான்றிதழ், கைப்பேசி பழுதுபார்ப்பு சான்றிதழ், ஆடை தைத்தல் சான்றிதழ், அலுமினிய பொருத்துநர் சான்றிதழ் மற்றும் மின்னியலாளர் சான்றிதழ் போன்ற பல்வேறு பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.

இந்தப் பயிற்சிகளில் சேர விரும்புவோர் ஜீன் 15ஆம் திகதிக்குள், யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி பணிப்பாளர் அவர்களுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு, தொழில்நுட்பவியல் கல்லூரியை நேரடியாகவோ அல்லது 0212212403 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article