யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (17) இதுவரை 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
யாழ்பல்கலைக்கழக மருத்துவப்பீட ஆய்வுக்கூடத்தில் 110 பேருக்கு மேற்கொண்ட சோதனையில் சுன்னாகம் பொது சந்தையில் வியாபாரம் செய்யும் உடுவில் பிரதேசத்தினை சேர்ந்த ஒருவருக்கும் மானிப்பாய் பிரதேசத்தினை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்ததப்பட்டுள்ளது