யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் Sea Leisure Yachting Group (SLYG) என்கிற அமைப்பினால் தயாரிக்கப்பட்ட ‘அம்பர்‘ எனப்பெயரிடப்பட்ட சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு இன்று (செப். 04) இடம்பெற்றது.

இன்றையதினம் குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து பரீட்சார்த்த சேவையினை அக்கடற் பகுதியில் வெற்றிகரமாக செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத்துணைத்தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.