தற்போது பரவி வரும் கொரானா வைரஸ் தொற்றினைக் கருத்திற் கொண்டு யாழ் மாவட்டத்தின் கொரோனா பாதுகாப்பு நிலமைகளைக் கருத்திற் கொண்டு கௌரவ வடமாகாண ஆளுனர் அவர்களின் தலமையில் கொரோனா நிலவரம் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது
நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளதாக அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
1. வணக்க ஸ்தலங்களில் சமய நிகழ்வுகளை அதற்கு பொறுப்பான மதத்தலைவர்கள் பரிபாலன சபையினர், மற்றும் நிகழ்வினை ஏற்பாடு செய்யும் உபயகாரர்கள், மட்டும் இணைந்து நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. சமய நிகழ்வுகள் அனைத்தும் அத்தலத்தின் உள்வீதியில் மட்டுமே நடாத்தப்படலாம். வெளி வீதிகளின் நடாத்தப்படும் எந்தவொரு நிகழ்வுக்கம் அனுமதி மறுக்கப்படுகின்றது.
2. திருமண மண்டபங்களில் அல்லது ஹொட்ல்களில் ஆகக்கூடியது 150 பேருடன், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைக் கருத்திற் கொண்டு நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படும். திருமண நிகழ்வுக்குரிய அனுமதி ஒருவாரத்திற்கு முன்பே அப்பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரியிடம் இருந்து பெறப்பட வேண்டும்.
திருமண வைபபவத்தின் போது இந் நடைமுறைகள் பின்பற்றப்படுவதை சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பார்கள்
திருமண வைபம் நிறைவு பெற்றதும் அதில் பங்கு பற்றியவர்களது பூரண விபரங்கள் சுகாதார திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
மேற்படி விதிகளை மீறி நடாத்தப்படும் திருமண மண்டபங்களுக்கும் ஏற்பாட்டாளருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
3. திரை அரங்குகளில் அங்குள்ள ஆசனங்களில் 25 வீதமான ஆசனங்களில் அமரக்கூடிய எண்ணிக்கையினைக் கொண்டுள்ள பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்படும். இங்கும் கொரோன பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படல் வேண்டும்.
இவ்வாறன முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது