யாழ் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் பொலிஸ்புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் நேற்றையதினம் (ஜனவரி16) கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது யாழ. கஸ்தூரியர் வீதியில்அமைந்துள்ள நகைக்கடை ஒன்றுக்கு சென்ற நபர்கள் தாம் பொலிஸ் புலனாய்வுபிரிவினர் கடையை சோதனையிட வந்துள்ளதாக சிங்கள மொழியில் கூறினர்.
அதே குழுவில் வந்த ஒருவர் அதனை கொச்சைத் தமிழில் கூறிய நிலையில்தம்மிடம் இருந்த போலி பொலிஸ் அடையாள அடையாள அட்டைகளைகாண்பித்து கடையை சோதனை இடுவதற்காக மூடுமாறு கூறியுள்ளனர்.
கடையை மூட மறுத்துள்ள நிலையில் தாமாகவே கடையை மூடிஅங்கிருந்தவர்களை அச்சுறுத்தி சுமார் 30 இலட்சம் ரூபாய் பணத்தைகொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த கொள்ளையர்கள் நகைக்கடையில் காணப்பட்ட சிசிடிவிகாணொளிகளையும் அழித்துச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளநிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்