வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணல் பிட்டிகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்று (ஒக்ரோபர் 30) காலை ஒன்பது மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் சட்ட விரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தல் , மக்களுக்கு இலகுவாகவும் நியாயமான விலையிலும் மணல் கிடைப்பதை உறுதிப்படுத்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் வன பரிபாலன சபை பணிப்பாளர் நாயகம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோர் நிகழ்நிலை ஊடாக கலந்து கொண்டதோடு, மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலாளர்கள், துறைசாா் திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொலிஸ் திணைக்கள பிரதிநிதிகள், கிராம சேவகர்கள் கிராம அபிவிருத்தச் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.