யாழ் மாவட்டத்தில் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடி நீரை வழங்குவதற்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த இரு மாதங்களாக யாழ் மாவட்டத்தில் அதிகளவிலான வெப்பநிலை கிடைக்கப்பெற்ற நிலையில் சில பிரதேசங்களில் ஏற்பட்ட வரட்சி காரணமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.
யாழ் மாவட்டத்தில் சுமார் 9 ஆயிரத்து 535 குடும்பங்கள் வரட்சியால் குடிநீர் பிரச்சனையை எதிர்கொண்ட நிலையில் அவர்களுக்கு தேவையான குடிநீரை வழங்கப்பட்டது.
மாவட்டத்திலுள்ள நீர் தேங்கக் கூடிய குட்டைகள் மற்றும் நீரேந்துப் பிரதேசங்கள் பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்புடன் தூர் வாரும் மற்றும் துப்ரவு செய்யும் செயற் திட்டங்கள் இடம்பெற்றது.
மேலும் அண்மையில் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளிடம் எமது பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி ஆழமாக்கி தருமாறு கோரிக்கை முன் வைத்துள்ளோம்.
ஆகவே எமது கோரிக்கைகளுக்கான திட்டங்களை தருமாறு ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு மாகாண மேலதிக செயலாளர் கோரியிருக்கின்ற நிலையில் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.