யாழில் தொடரும் முடக்க நிலையில் லீசிங் கம்பனிகள் பழைய பாக்கிகளை அறவிடுவதில் முனைப்புக்காட்டி வருகின்றன.
குறிப்பாக அரசாங்கத்தால் தொழிலிழந்தவர்களுக்கு வழங்கப்படும் 5000 நிதி உதவி எப்போது வழங்கப்படுகின்றது என்பதை அறிந்து வீடு வீடாக சென்று அவற்றை மிரட்டி அறவிட்டுச் செல்லும் அநாகரிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரச உதவி நிதியை லீசிங் பணத்துக்கு கட்டிவிட்டு பல குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
லீசிங் கம்பனிகளின் நெருக்குதலால் பலர் மன உழைச்சலுக்குள் தள்ளப்பட்டுள்ளதுடன் கடந்த வாரம் ஒருவர் உயிர் மாய்த்தமையும் குறிப்பிடத்தக்கது.
முடக்க காலத்தில் லீசிங் கம்பனி அறவீட்டாளர்கள் சுதந்திரமாக நடமாடி பண அறவீட்டில் ஈடுபடுகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.