யாழில் 2ஆம் கடட்டமாக 38456 பேருக்கு தடுப்பூசி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
யாழ். மாவட்டத்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் ஆரம்பமான இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையில் நேற்று வரை 38456 பேருக்கு தடுப்பூசி இஏற்றப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழி2 ஆம் கட்டத்தின் முதலாவது தடைவ தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த யூலை மாதம் 5ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் 5 ஆம் திகதி முதல் நாளில் யாழ் மாவட்டத்தில் 9465 பேருக்கும், 6 ஆம் திகதி இரண்டாம் நாளில் 9457 பேருக்கும், 7ஆம் திகதி மூன்றாம் நாளில் 12,034 பேருக்கும், 8 ஆம் திகதி நான்காம் நாளில் 7497 பேருக்கும் என மொத்தமாக 38456 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
Share this Article