யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதைக்கு அடிமை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறுகிடைப்பதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் சட்டவைத்திய அதிகாரிவைத்தியர் செ.பிரணவன் தெரிவித்தார்.

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்குமறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துகள்களை முன்வைக்கையில் அவர் இதனைதெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடுஅதிகரித்துள்ளது.சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்குஉயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறுகிடைக்கப்பெறுகின்றது என தெரிவித்துள்ளார்.

Share this Article