மோசமடையும் ஷிரந்தியின் உடல்நிலை!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிற்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் அவரது உடல்நிலை இன்னும் முழுமையாக குணமடையவில்லை தகவல் வெளியாகியுள்ளது.

அவர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், மேலும் அவரது இதயம் மின்கலன்களில் இயங்குவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மனைவியை பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில், விளக்கமறியலில் உள்ள ஷிரந்தி ராஜபக்சவின் புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு பிணை வழங்கப்படாததாலும் அவரை பார்க்க பெருமளவு மக்களும் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாமல் ராஜபக்சவை பார்வையிட வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தாயாரின் உடல்நிலை பற்றி தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும் கவலையில் நாமல் ராஜபக்ச

தனது தாயாரை முடிந்தவரை பாதுகாப்பாக கவனித்துக்கொள்ளுமாறு அனைவரிடமும் கூறி வருவதாகவும் கூறப்படுகின்றது.

தாயாரின் உடல்நிலை தொடர்பில் நாமல் ராஜபக்ச பெரும் கவலையில் உள்ளமையினால் அவரை பார்க்க நீதிமன்றத்தில் அனுமதி கோர அவரின் சட்டக்குழுவினர் தயாராகி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதேவேளை, “சிரிலிய சவிய” கணக்கு தொடர்பான தொடர் விசாரணைகளின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் ஆணைக்குழுவால் முன்னாள் முதல் பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டிருந்தார்.

ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை

இதனைத்தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.பொதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்த நீதவான், ஷிரந்தி ராஜபக்சவின் மருத்துவ நிலை குறித்த தகவல்கள் அறிக்கையில் உள்ளதாகவும், அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ஷிரந்தி ராஜபக்சவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.  

Share this Article
Leave a comment