மேற்கத்திய சட்டங்கள் அனைத்தும் இலங்கைக்கு சிறிதும் பொருந்தாது சிறுவர்கள்தண்டிக்கப்பட்டு சரியான பாதையில் வழிநடத்தப்பட வேண்டும் என பேராயர்மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கல்வியில் அனைத்து மேற்கத்திய சட்டங்களையும்பின்பற்றப்படக்கூடாது. குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் இது சிக்கலைஉருவாக்கும், அப்படியென்றால் ஆசிரியர்களும் எப்படி சமாளிப்பார்கள்? ஆசிரியர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. பாடசாலையில் மாணவர்கள்தவறாக நடந்து கொண்டால், ஆசிரியர் தலைமுடியை அவ்வளவு நீளமாக வளர்க்கவேண்டாம் என்றும் அதை வெட்ட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரைகூறலாம்.
அப்படிச் சொன்னால், அந்த மாணவர்கள் பொலிஸ் நிலையம் சென்று என்ஆசிரியர் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறலாம். இதைச்சொன்னதற்காக ஆசிரியரைக் கைது செய்யலாம். அது மிகப் பெரிய தவறு. இதைநாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மேற்கத்திய நாடுகளுக்கு நல்லது என்றஅனைத்தும் இலங்கைக்கு ஏற்றதல்ல.
நமது இலங்கையில், நாம் மதிக்க வேண்டிய ஒரு கலாச்சாரம், ஒரு அமைப்புமற்றும் நெறிமுறைகள் உள்ளன. எனவே, கல்வி அதிகாரிகள் தயவுசெய்துஇதைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் பிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய பக்தியையும்அன்பையும் வளர்க்கும் போக்கைத் தடுக்காதீர்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.