முல்லைத்தீவு மாவட்டத்தின், மாவட்ட விவசாய குழுக் கூட்டம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தின், மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று (19/12) மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது.

இதன் போது முல்லைத்தீவு மாவட்ட விவசாய பிரிவின் செயற்பாடுகள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகள், விவசாயம் காப்புறுதி சார் செயற்பாடுகள், மாகாண விவசாய திணைக்களத்தின் செயற்பாடுகள், கமநல அபிவிருத்தி திணைக்கள செயற்பாடுகள், விதை ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் ஏற்ப்பட்ட விவசாய அழிவுகள் அவற்றிற்கான நிவாரணங்கள், விவசாய நிலங்களுக்கான வீதி புனரமைப்புக்கள், சேதமடைந்த குளங்கள் மீள் புனரமைப்புக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைத்தல், மேய்ச்சல் நிலம் உள்ளிட்ட ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெயக்காந்(காணி),  மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள்,  துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள்,  மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

Share this Article