முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்தபொங்கலுக்கு நேர்த்திக்கடன் செய்ய ஆரம்பித்த (தூக்குகாவடி) நிலையில்காவடி கட்டப்பட்ட பகுதியுடன் உழவியந்திரபெட்டி தடம்புரண்டதில் இருவர்காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்தெரியவருவதாவது,
முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் உள்ள கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார்ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு நேற்று(ஏப்ரல்14) இடம்பெற்ற நிலையில்குறித்த ஆலய தூக்குகாவடி நேர்த்திகடனை நிறைவேற்ற குமுழமுனை கற்பகபிள்ளையார் ஆலயத்திலிருந்து கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலயத்தைநோக்கிச் செல்ல இருந்த வேளை தூக்கு காவடி கட்டப்பட்ட உழவியந்திர பெட்டிகற்பக பிள்ளையார் ஆலய வளாகத்தில் திடீரென குடைசாய்ந்ததனால் குறித்தவிபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதனையடுத்து தூக்கு காவடி எடுத்த இரு இளைஞர்களும் விபத்தில்காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்குக்கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.